Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
ChuChuTV Tamil
ChuChuTV Tamil
Performer
ChuChu TV
ChuChu TV
Lead Vocals
COMPOSITION & LYRICS
ChuChu TV
ChuChu TV
Songwriter
PRODUCTION & ENGINEERING
ChuChu TV Studios LLP
ChuChu TV Studios LLP
Producer

Lyrics

Hi நான் தான் Baby Taku
என் குடும்பத்தோடும் நண்பர்களோடும்
விளையாடுவது எனக்கு பிடிக்கும்
என் பொம்மைகளோடு விளையாடவும் பிடிக்கும்
எனக்கு கலர் செய்வது மற்றும் பூங்காவில் போய்
விளையாடுவதும் ரொம்ப பிடிக்கும்
பள்ளிக்கூடமா?
நான் இன்னும் கொஞ்ச நாளுல பள்ளிக்கூடம் போவேன்
அத நினைச்சா கொஞ்சம் ஜாலியாவும் கொஞ்சம் படபடப்பாகவும் இருக்கு
உங்ககிட்ட சொல்லவா என் முதல் நாள் பள்ளிக்கூட அனுபவத்தை?
பள்ளிக்கு போகும் முதல் நாள்
முதல் நாள் முதல் நாள்
பள்ளிக்கு போய் நான் என்ன செய்வேன்
சொல் என் அம்மா
பல சந்தோஷங்கள் காத்திருக்கு
உல்லாசமாய் இருந்திடலாம்
நல்ல நண்பர்கள் பலரும் கிடைத்திடுவார்
உன்னை போலவே கண்ணே
நட்பாய் பழகும் ஆசிரியர்
பல சந்திப்பாய் நீ சந்திப்பாய்
அன்பாய் அவரும் பழகிடுவார்
கவலை வேண்டாம் கண்ணே
A B C எல்லாம் கற்றிடுவாய்
A B C A B C
எண்கள் கூட கற்றிடுவாய்
ஒன்று இரண்டு மூன்று
வண்ணங்கள் பலவும் கற்றிடுவாய்
பல பல வண்ணம் பிடிக்கும் வண்ணம்
சிவப்பு நீலம் பச்சை மஞ்சள்
ஆரஞ்சு ஊதா பழுப்பு
வடிவங்கள் பலவும் கற்றிடுவாய்
வேடிக்கையான பல வடிவம்
வட்டம் முக்கோணம் நீள் சதுரம்
இதயம் சதுரம் நீள் வட்டம்
பல உடுக்கை கொண்டு விளையாடிடலாம்
நல்லிசையாக நாம் வாசிக்கலாம்
டம் டம் டம் என இசைத்திடலாம்
ஒரு மேளம் கொட்டிடுவோம்
சறுக்கு மரம் நீ ஆடிடலாம்
ஊஞ்சல் ஆடி மகிழ்ந்திடலாம்
ஒவ்வொரு நொடியும் சுகமாகும்
பள்ளிக்கு செல்லலாம் கண்ணே
பல பொம்மைகளோடு விளையாடலாம்
வண்ண பொம்மைகள் பல உண்டு
ஓடுகள் மீது வரைந்திடலாம்
பள்ளிக்கூடம் சுகமே
பல கதைகள் படித்து மகிழ்ந்திடலாம்
சிரிக்க வைக்கும் நல்ல கதைகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கூறி கொண்டாடலாம் கண்ணே
இந்த நாளும் இனிதாய் முடிவடையும்
பள்ளிக்கூடம் நிறைவடையும்
நானும் நீயும் சந்தோஷமாய்
திரும்பி வடுவோமே
பள்ளிக்கூடத்தின் முதல் நாள்
நான் பள்ளிக்கு செல்லும் முதல் நாள்
பள்ளிக்கு உடனே போகலாம்
வா என் அம்மா
வா என் அம்மா
என் கூட வா
என் அம்மா
Written by: ChuChu TV
instagramSharePathic_arrow_out