Lyrics
என் செல்ல செல்ல அம்மா இங்க பாரும்மா
நான் ஓடும் போது பெரிய வண்டு வந்துச்சு
பயந்து போய் நானும் கீழே விழுந்துட்டேன்
கையில் இந்த "ஊ ஊ" ரொம்ப வலிக்குது
என் செல்ல குட்டி பாப்பாவுக்கு காயம் பட்டுச்சா?
உன் அம்மா ஒரு மாயம் செய்து காட்டட்டா?
"ஊ ஊ" மேலே சின்ன bandage போடலாம்
மீண்டும் நீயும் அங்கு விளையாட போகலாம்
செல்ல செல்ல அம்மா நான் துள்ளி குதிச்சேனே
அங்கிருந்த ரயில் பொம்மை காலில் பட்டதே
குதிக்கும் போது காலின் விரல் நசுங்கி போனதே
கட்டை விரலில் "ஊ ஊ" ரொம்ப வலிக்குதே
பட்டுக்குட்டி உன் காலை அம்மா பார்க்கிறேன்
உன் காயத்தை சரி செய்யும் வித்தை செய்வேன்
அந்த "ஊ ஊ" மேலே சின்ன bandage போட்டாச்சு
நீ துள்ளி துள்ளி விளையாடும் நேரம் வந்தாச்சு
அம்மா நானும் பந்தை பிடிக்க போனேனே
சுவற்றில் அடித்த பந்து, என் மேலே பட்டதே
கீழே விழுந்ததால் கையில் காயம் பட்டதே
கையில் இந்த "ஊ ஊ" ரொம்ப வலிக்குதே
அழவேண்டாம் கண்ணே அம்மா இருக்கிறேன்
இந்த "ஊ ஊ"வை சரி செய்யும் வழியும் செய்கிறேன்
காயத்தை கழுவி விட்டு மருந்தை தடவினால் - அந்த
"ஊ ஊ"வும் மறைந்து போகும், நீயும் ஆடலாம்
குழந்தைகளுக்கு என்றும் ஆட்டம் பாட்டம் தான் - அந்த
விளையாட்டை தடை செய்யும் செயலும் நடக்கலாம்
காயம் பட்டு "ஊ ஊ" அச்சம் கொடுக்கலாம் - அந்த
காயத்தை மருந்து போட்டு அம்மா போக்குவாள்
Written by: ChuChu TV