Lyrics

ம்ம்ம்ம், ம்ம்ம்ம்
ஹ-ஹ-ஹ, ஹா-ஹா-ஹா
ஹஹஹ
பிறையே பிறையே, வளரும் பிறையே
இது நல்வரவே
மலரே மலரே, மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
பயணம் எவர்க்கும் இங்கு முடியும்
இங்கு பிறந்தாயோ?
உதயம் உனக்கு இங்கு தொடக்கம்
விழிகள் திறந்தாயோ?
பிறையே பிறையே, வளரும் பிறையே
இது நல்வரவே
தன்னன் தனியாக மண்ணில் வர ஏங்கினாயோ?
என்ன துணிச்சலோடு, இந்த வரம் வாங்கினாயோ?
சோலையில் நின்ற போதிலும், அது மாலையே என்ற போதிலும்
பூவெல்லாம் என்றும் பூக்களே
இங்கு மாறுமா அதின் பெயர்களே?
குடிசை என்ன செய்யும், கோட்டை என்ன செய்யும்?
உன்னை மாற்றுமா?
பிறையே பிறையே, வளரும் பிறையே
இது நல்வரவே
மலரே மலரே, மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
ஊர்வலங்கள் எல்லாம் வரும், உன்னை நோக்கி தானே
ஊரும் உறவும் ஏது, எல்லாம் உனக்கு ஒன்று தானே
பணத்திலே தினம் புரண்டவர்
பெரும் பதவியில் தலை கணத்தவர்
புகழிலே எல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்
இந்த பேதம் எல்லாம், வெந்து போக கண்டு
தெளிந்த மனிதன் நீ
பிறையே பிறையே, வளரும் பிறையே
இது நல்வரவே
மலரே மலரே, மலர்ந்தாய் மலரே
உனக்கேன் தளர்வே
Written by: Vaalee
instagramSharePathic_arrow_out