Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
Chinmayi Sripada
Chinmayi Sripada
Performer
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Performer
Viishnu
Viishnu
Actor
Sunaina
Sunaina
Actor
COMPOSITION & LYRICS
N.R. Raghunanthan
N.R. Raghunanthan
Composer
Vairamuthu
Vairamuthu
Lyrics

Lyrics

பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே! என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன் என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும் அலை மறுபடி உன்னிடம் வருமா பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே! தண்ணீரில் வலையும் நிற்கும் தண்ணீரா வலையில் நிற்கும் எந்தேவன் எப்போதும் திரிகிறான் காற்றுக்கு தமிழும் தெரியும் கண்ணாளன் திசையும் தெரியும் கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான் உனது வேர்வை என் மார்புக்குள் பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே ஈர வேர்வைகள் தீரவும் எனது உயிர்பசி காய்வதா வானும் மண்ணும் கூடும் போது நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே! ஊரெங்கும் மழையும் இல்லை வேரெங்கும் புயலும் இல்லை என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே கண்ணாளன் நிலைமை என்ன கடலோடு பார்த்து சொல்ல கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழுவான் இன்று நாளைக்குள் மீளுவான் எனது பெண்மையை ஆளுவான் என்னை மீண்டும் தீண்டும் போது காதல் தேவன் இருமுறை முதலிரவுகள் பெறுவான் பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே! என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன் என் ஜீவன் வந்து சேருமா தெய்வம் மீண்டும் வாழுமா இதோ எந்தன் கண்ணீர் அந்த அலை சேரும் அலை மறுபடி உன்னிடம் வருமா பற பற பற பறவை ஒன்று கர கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் நீரை நனைக்குதே! கட கட கட கடலுக்குள்ளே பட பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
Writer(s): N.r. Raghunanthan, Ramasamy Thevar Vairmuth Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out