Featured In
Top Songs By Anirudh Ravichander
Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Anirudh Ravichander
Performer
Abby V
Performer
Shruthika Samudhrala
Performer
Kamal Haasan
Actor
S.J. Surya
Actor
Kajal Agarwal
Actor
Rakul Preet Singh
Actor
Priya Bhavani Shankar
Actor
Siddharth
Actor
COMPOSITION & LYRICS
Anirudh Ravichander
Composer
Thamarai
Lyrics
Lyrics
நீலோற்பம் நீரில் இல்லை
ஏன் தாண்டினாய் எல்லை
இனி ஏதும் தடங்கல் இல்லை
எப்போதும் நெஞ்சில் தொல்லை
தூக்கங்களும் இல்லை
இதை மீறி புகார்கள் இல்லை
நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும்
எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும்
தடுக்கி நீ வீழ வேண்டும் என்று கூட ஆசை உண்டு தான்
தடுத்து நான் தாங்கி கொண்டு தூக்கி செல்ல வேண்டும் இன்று தான்
மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
நீ இன்றி நான் இல்லை
விரற்கடை அளவிலே இடைவெளியை
எதர்க்கடா தருகிறாய்
மனத்தடை நிலவு அதை உடைக்க
நெருக்கடி கொடுக்கிறாய்
குளிருதே வெயில் குமுறுதே குயில்
உதிருதே துயில் ஏனோ?
உடலிலே கனல் உருகுதே நிழல்
குறைவதே இதழ் தானோ
நீண்ட நாள் பார்க்கவில்லை உன்னை ஆவலாதி கேட்கவோ
நடந்ததை மெல்ல மெல்ல நீயும் சொல்ல தோளில் சாய்க்கவோ
மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
நீ இன்றி நான் இல்லை
நெருங்கி நீ நேரில் முத்தங்கள் தராத போதும்
எறிந்திடும் முத்தம் காற்றிலே வந்தாக வேண்டும்
மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
எதிலும் மாறா மனமிரண்டும் ஒன்றாய் சேர்ந்ததென்ன?
தீரா தவிப்புகளும் தானாய் தீர்ந்ததென்ன?
நீ இன்றி நான் இல்லை
Written by: Anirudh Ravichander, Manoj Muntashir Shukla, Thamarai