Top Songs By Madhan Karky
Lyrics
ஹே புகைபூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு
படிகத்து துகளோ பனியோ
நுகர்ந்திட தேவை இல்லை
உன் வாசம் கொடு
உன் குழல் எழிலில்
அக் குழல் மறக்க
உன் காதல் போதும் பெண்ணே
கிரு கிறுக்க ஹே பெண்ணே
ஹே புகைபூஞ்சுருளும் பொருளும்
எரித்திட தேவை இல்லை
ஒரு முத்தம் கொடு
என் போதை கோதை
போதை கோதை நீயே
என் போதை கோதை
போதை கோதை நீயே
திரவங்களும் பீற்று குழலும்
குருதிக்கு தேவை இல்லை
ஒரு புன்னகை கொடு
தேவதை சாத்தான் ரகசியம்
கேட்டிட தேவை இல்லை
உன் சொற்கள் கொடு
உன் மொழியினிலே சுகம் கிடைக்க
உன் காதல் போதும் பெண்ணே
என்னை ஈர்க்க ஹே பெண்ணே
மூலிகை சாலக் காளான்
எதுவுமே தேவை இல்லை
உன் நெஞ்சை கொடு
என் போதை கோதை
போதை கோதை நீயே
என் போதை கோதை
போதை கோதை நீயே
திமிரழகி
என் நெஞ்சின் ஆடை கலைந்தாய்
திமிரழகி
நிர்வாணமான என் காதல்
நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ
நீள் இரவும் நீ
நீள் கனவும் நீ
நீள் மயக்கம் நீ
நீள் உறக்கம் நீ
என் போதை கோதை
போதை கோதை நீயே...
Writer(s): Karthik, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com