Top Songs By K. J. Yesudas
Credits
PERFORMING ARTISTS
K. J. Yesudas
Performer
Sunanda
Performer
COMPOSITION & LYRICS
Soundaryan
Composer
Lyrics
சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணி கொண்டு இந்த அல்லிதண்டு
மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும் மான் இனத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால் எந்தன் நெஞ்சில் காயமடி
சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணி கொண்டு இந்த அல்லிதண்டு
மனம் விம்மி வருந்துது
குமரி நீயும் குழந்தையடி
மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பாக்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததால் உந்தன் முகம் சிவந்தது
எந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி
சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணி கொண்டு இந்த அல்லிதண்டு
மனம் விம்மி வருந்துது
மனசுக்கேத்த மாப்பிள்ளைய
உம் மனசு போல மணம் முடிப்பேன்
சீமந்தமும் நடத்தி வைப்பேன்
உன் குழந்தைகள நான் சுமப்பேன்
பதினாறுகளும் பெற்று நீ வாழனும்
அத பார்த்து நான் தினம் தினம் மகிழனும்
நம்ம ஊரும் உறவும்
உனது வாழ்வை மகிழ்ந்து பாடனும்
சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணி கொண்டு இந்த அல்லிதண்டு
மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும் மான் இனத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால் எந்தன் நெஞ்சில் காயமடி
சின்ன தங்கம் எந்தன் செல்ல தங்கம்
ஏன் கண்ணு கலங்குது
எதை எண்ணி கொண்டு இந்த அல்லிதண்டு
மனம் விம்மி வருந்துது
Writer(s): Soundaryan
Lyrics powered by www.musixmatch.com