Similar Songs
Credits
PERFORMING ARTISTS
Chinmayi Sripada
Performer
COMPOSITION & LYRICS
Vishal & Shekhar
Composer
Vairamuthu
Lyrics
Lyrics
என் உயிர் என்னை விட்டு பிரிந்த பின்னே
என் தேகம் மட்டும் வாழ்ந்திடுமோ ஒ
கண்ணீரிலே ஹாய் மீன் வாழுமோ
நீ என் உடலுக்குள் உயிரல்லவா
ஒரே உயிர் நாமல்லவோ
உடல் வாழவே ஓ உயிர் போகுமோ
இருதயம் தூளான பிறகு
இடிகளைத் தாங்காது பட்டுப்பூச்சி சிறகு
இனி எந்தன் வாழ்வே வீணோ
வெறுமையோ
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
When you go when you leave
Then you take a little piece of me with you
There's a hole in my soul
'Cause you take a little piece of me with you
When you go when you leave
Then you take a little piece of me with you
There's a hole in my soul
'Cause you take a little piece of me with you
உன் கண்ணில் தானே நான் பார்த்துக் கொண்டேன்
கண்ணே போனால் நான் என்னக் காண்பேன்
உன் செவியில் தானே நான் ஒலிகள் கேட்டேன்
செவியே போனால் யார் பாடல் கேட்பேன்
கண்ணிரண்டும் கண்ணீரில் மிதக்க
காற்றுக்கு விரல் இல்லை கண்ணீரைத் துடைக்க
வாழ்வினை இழந்த பின் வாழ்வா ஓ நீ வா வா
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டு
அழுவதும் என்ன
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
நதியோடு போகும் குமிழ் போல வாழ்க்கை
எங்கே உடையும் யார் சொல்லக் கூடும்
இலையோடு வழியும்
மழை நீரைப் போலே உடலோடு ஜீவன்
சொல்லாமல் போகும்
உயிரே நான் என்ன ஆவேன்
உணர்வே இல்லாத கல்லாகிப் போவேன்
மரணத்தை வெல்ல வழி இல்லையா
நீ சொல்
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
மண்ணின் மேல் ஒரு மாமலை
இன்று விழுந்ததும் என்ன
மலை தான் கொண்ட அருவிகள் ரெண்டும்
அழுவதும் என்ன
Written by: Vairamuthu, Vishal & Shekhar