Lyrics

தம்பி, தூங்காதே தம்பி தூங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும் சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும் சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும் தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும்கெட்டார் நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும்கெட்டார் சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் ஆஆ ஆஆஆ ஆ ஆ ஆஆஆ விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார் தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான் கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா தூங்காதே தம்பி தூங்காதே சோம்பேறி என்ற பெயர் வாங்காதே தூங்காதே தம்பி தூங்காதே தம்பி தூங்காதே
Writer(s): Pattukkottai Kalyanasundaram, S. M. Subbiah Naidu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out